திங்கள், 18 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2024 (09:23 IST)

'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது!

திரைப்படத் துறையில் அனுபவமிக்க பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து  சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த  கதையாக இப்படம் தயாராகிறது. 
 
பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமுல்லாமல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும் உருவாக்குகிறது.  
 
இது தொடர்பாக நமித் மல்ஹோத்ரா பேசுகையில்:
 
''அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பல ஆண்டுகாலம் வாழ்ந்து.. மற்ற நிறுவனங்களை விட கடந்த பத்து ஆண்டுகளில் இணையற்ற வணிக வெற்றியையும், அதிக ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஒரு வணிகத்தையும் உருவாக்கினோம்.‌ எனது தனிப்பட்ட பயணமும் என்னை வழிநடத்தியது. ராமாயணத்தின் வியக்கத்தக்க அளவிலான கதைக்கு நியாயம் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அதை உரிய கவனிப்புடனும், மரியாதையுடனும் அணுகுகிறேன். 
 
தொடக்கத்தில் இருந்தே எனது சவால்கள் இரண்டு மடங்குகளாக இருந்தன. ஒரு கதையின் புனித தன்மையை மதிப்பது.. அதனுடன் வளர்ந்த நம் அனைவராலும், இதனை ஆச்சரியப்படும் வகையில் அதை உலகிற்கு கொண்டு வருவது.. இந்தக் கதையை சர்வதேச பார்வையாளர்கள் பெரிய திரை அனுபவமாக ஏற்றுக்கொள்வர். 
 
நமது கலாச்சாரத்தின் தனித்துவமான சிறந்த விசயங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான ஆசையை... யாஷ்ஷை சந்தித்தபோது அவரிடமும் இருந்ததை நான் உணர்ந்தேன். கர்நாடகாவிலிருந்து 'கே ஜி எஃப் 2' வின் நம்ப முடியாத சர்வதேச வெற்றிக்கான அவரது பயணத்தால் ஈர்க்கப்பட்டு, எங்களின் எல்லா கதைகளிலும் மிகப்பெரிய உலகளாவிய தாக்கத்தை உருவாக்க உதவும் இவரை தவிர, சிறந்த கூட்டாளரை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
 
கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் உயிரை சுவாசிக்கும் அவரது மறுக்க முடியாத திறனுடன் யாஷ் ஒரு சர்வதேச அடையாளமாக உருவெடுத்துள்ளார். அவர் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தீவிர ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு முதல் தனது அனைத்து படங்களின் ஆக்கபூர்வ தயாரிப்பாளராக யாஷ் பல புதுமைகளையும், அனுபவத்தையும் கொண்டு வருகிறார். அவர் ஈடுபடும் ஒவ்வொரு திட்டமும் பார்வையாளர்களிடம் ஆழமான அளவில் எதிரொலிக்கிறது.'' என்றார். 
 
ராக்கிங் ஸ்டார் யாஷ் பேசுகையில்: 
 
இந்திய சினிமாவை உலக அளவில் வெளிப்படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. அதை  நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிறந்த வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களில் ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தேன். இந்நிறுவனத்தின் பின்னணியில் சக இந்தியர் ஒருவர் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமித் மல்ஹோத்ராவும், நானும் சந்தித்து, பல்வேறு அமர்வுகளில் பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். 
 
இதன் போது தற்செயலாக இந்திய சினிமாவுக்கான தொலைநோக்குப் பார்வையில் எங்களின் கருத்தாக்கம் சரியாக இணைந்தது. நாங்கள் பல்வேறு திட்டங்கள் குறித்து தீவிரமாக விவாதித்தோம். இந்த விவாதங்களின் போது ராமாயணமும் இடம்பெற்றது. நமித் தன்னுடைய வேலைக்கான அட்டவணைகளில் இதனை ஒரு பகுதியாக கொண்டிருந்தார். ராமாயணம் ஒரு பாடமாக என்னுடன் ஆழமாக எதிரொலிக்கிறது. அதற்காக என் மனதில் ஒரு அணுகுமுறையும் இருந்தது. ராமாயணத்தை இணைந்து தயாரிப்பதற்கான குழுவில் இணைவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் ஒரு இந்திய திரைப்படத்தை உருவாக்கும் எங்களது கூட்டுப் பார்வை மற்றும் அனுபவத்தை ஒன்றிணைத்திருக்கிறோம். 
 
ரசிகர்களை ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தும் படைப்பு மற்றும் சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது.மேலும் அனுபவமிக்க இரண்டு தயாரிப்பாளர்களும் இப்படத்திற்காக இணைந்திருக்கின்றனர். 
 
நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் தயாரிப்பில், நித்தேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது என்றார்.