புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (13:49 IST)

ப்ளீஸ் அடுத்தவங்களோட கம்பேர் பண்ணாதீங்க - செருப்படி ரிப்ளை கொடுத்த விவேக்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் தளபதி விஜய்க்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை விடுத்தார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். நேற்று  இந்த சேலஞ்சை தளபதி விஜய் அவர்கள் ஏற்று நிறைவேற்றினார்.  இதுகுறித்து தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடிகளை நட்டு, இதுகுறித்த குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்தார்.

அவரே மண்வெட்டியால் குழி தோண்டி செடிகளை நட்ட இந்த புகைப்படங்கள் செம வைரல் ஆகியது.  மேலும் மகேஷ் பாபு தனது நன்றியை தெரிவித்த தளபதி விஜய்,  "கிரீன் இந்தியா சேலஞ்சை அனைவரும் நிறைவேற்றினால் அனைவருக்கும் நல்லது , அனைவருக்கும் சுகாதாரமானது" என்று குறிப்பிட்டார். இதையடுத்து வம்புக்கென்றே நடிகை மீரா மிதுன்,  உங்கள் வீட்டுக்குள்ளேயே மரக்கன்றை நடுவது சமூக அக்கறை இல்லை. எப்படி மரக்கன்றை நட வேண்டும் என்று விவேக் சாரிடம் காத்துக்கொள்லுங்க என்று விஜய்யை கிண்டலடித்தார்.

இந்நிலையில் மீராவின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்த விவேக், "மகேஷ் பாபு சார் விஜய் சார் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இயற்கைக்காக ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்தால் ரசிகர்களும் அதை பின்தொடர்ந்து நல்ல காரியங்களை செய்வார்கள். நாம் இதனை வரவேற்கவேண்டும். தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடாதீர்கள். நம்முடைய இலக்கு பசுமையான பூமி மட்டுமே'' என்று பதிவிட்டுள்ளார்.