இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு சீரியஸ் ரோல்...?
இந்தியன் 2 படத்தில் விவேக் சிபிஐ அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் படம் இந்தியன் 2. இதில் கமலுடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் விவேக் சிபிஐ அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது வரை பார்க்காத விவேக்கை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கிய பாய்ஸ், அந்நியன' மற்றும் சிவாஜி ஆகிய படங்களில் விவேக், கமலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இந்தியன் 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேபில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.
தற்போது ஆந்திரா ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.