ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (17:07 IST)

நடிகர் விஷால் மேலாளரின் கார் கண்ணாடி உடைப்பு !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளரும் வலம் வருபவர்  விஷால். சமீபத்தில் இவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் கணக்காளர் ரம்யா ரூ. 45 லட்சம் அளவுக்கு கையாடல் செய்துவிட்டதாக செய்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் புகார் அளித்த விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பருப்பதாக கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.