மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தின் பணிகளுக்காக லண்டன் சென்று இருந்தார் என்பதும் அவர் மீண்டும் இந்தியா திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாக ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில் சற்று முன்னர் வடிவேலு முழுமையாக குணமாகி விட்டதாகவும் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
அதன்படி தற்போது நடிகர் வடிவேலு கொரொனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
நானும், இயக்குநர் சுராஜும் கடந்த 30 ஆம் தேதி வீடு திரும்பினோம். 3 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.