ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (10:02 IST)

தல என்று பச்சைக் குத்திய நடிகர்… அதைப் பார்த்து அஜித் ரியாக்‌ஷன் என்ன?

தமிழ் சினிமா நடிகர்களில் அஜித்துக்கு எப்போதுமே வெறித்தனமான ரசிகர்கள் உண்டு.

அவர்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்றால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விட அஜித் மேல் அதிக ப்ரியம் வைக்கும் அளவுக்கு. இணையத்தில் யாராவது அஜித்தைப் பற்றியோ அவர் படங்களைப் பற்றியோ விமர்சனம் வைத்தால் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொங்கி எழுவார்கள். அஜித்துக்கு இதுபோன்ற ரசிகர்கள் திரையுலகுக்கு வெளியில் மட்டும் இல்லாமல் திரையுலகுக்கு உள்ளும் உண்டு.

அந்த வகையில் சில சினிமாக்களில் தலைகாட்டியவரும், இப்போது பகல் நிலவு என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவருமான ஜெமினியும் ஒருவர். இவர் ஒரு நேர்காணலில் தனது கையில் தாய் தந்தை தல எனப் பச்சைக் குத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் புகைப்படத்தையும் பச்சைக் குத்தியுள்ளார்.அதைப் பார்த்த அஜித் கடுப்பாகி உடனடியாக அதை வலியில்லாமல் ஏதாவது மருந்து போட்டு அழித்து விடுங்கள். நிறையப் பேர் இப்படி செய்கிறார்கள் எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது எனக் கூறி கண்டித்ததாக அவரே சொல்லியுள்ளார்.