செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (19:31 IST)

'கங்குவா' பட அப்டேட் வெளியிட்ட நடிகர் சூர்யா!

kanguva
சூர்யா நடிப்பில்  சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கங்குவா. சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது

இப்பட ஷூட்டிங்கின்போது,  நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க  வெளி நாடு சென்றிருந்தார்.

பின்னர், புத்தாண்டு முடிந்து  நடிகர் சூர்யா, சென்னை திரும்பிய நிலையில், சமீபத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்கு கலைஞர் பற்றி பேசினார்.

இந்த நிலையில், கங்குவா படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கங்குவா பட புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

அதில்,'' ''கங்குவா படத்தில் தன் காட்சிகளை நிறைவு செய்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''கங்குவா பட இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு நன்றி! -இப்படத்தை திரையில் காண காத்திருப்பதாக'' தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இப்படம் வரும்  ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக்கிழமை  ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ''ஹாலிவுட் ஸ்டைலில் இப்படம்  உருவாகி வருவதாக'' தயாரிப்பாளர் சமீபத்தில் கூறிய நிலையில், இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.