வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (10:56 IST)

அய்யகோ.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாரா நடிகர் சதீஷ்… இன்ஸ்டாவில் வெளியிட்ட தகவல்!

2020 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி இதுவரை 1200க்கும் மேற்பட்ட எபிசோட்கள் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு அதில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சதீஷும் ஒரு முக்கியக் காரணம். அவரஒ சமூகவலைதளங்களில் ஒரு மீம் மெட்டீரியல் ஆகவே ரசிகர்கள் மாற்றிவிட்டார்கள்.

இந்த சீரியலில் கோபி, பாக்யாவை திருமணம் செய்துகொண்டும், ராதிகாவைக் காதலித்துக் கொண்டும் இருக்கும் விதமாக உருவாக்கப்பட்ட காட்சிகள் கோபியை ஒரு ப்ளே பாய் போல சித்தரித்தன. இது இரு தரப்பிற்கும் தெரியாமல் கோபி தில்லு முல்லு வேலைகள் செய்து தப்பித்து வந்தார். ஒரு கட்டத்தில் அது அனைவருக்கும் தெரிந்துவிட, இப்போது சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பாக்கியலட்சுமி" தொடரை விட்டு நான் விலகும் நேரம் நெருங்கிவிட்டது. ஒரு பொய்யை முத்தமிடுவதை விட, உண்மையிடம் அறை வாங்கிக் கொள்ளலாம்.” எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் சீரியல் முடியப் போகிறதா? அல்லது சதீஷ் மட்டும் தொடரில் இருந்து விலகப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.