1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:14 IST)

நடிகர் சந்தானம் நடிப்பில் 'கிக்' பட டீசர் ரிலீஸ்

Kick
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளள 'கிக்' பட டீசரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.


சினிமாவில் பிரபல நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டன்ஸ் பாம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளள கிக் பட டீசரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தை ஃபார்ச்சுன் தயாரிக்கிறது. பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்துடன்  இணைந்து தான்யா ஹோ, தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி இப்படம் தியேட்டரில் ரிலிஸாகவுள்ளது.

காதல் மற்றும் காமெடி கலந்து இப்படம் உருவாகியுள்ளதாக கிக் பட டீசரில் தெரிகிறது.