திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 மார்ச் 2018 (22:03 IST)

காசநோயால் அவதிப்பட்ட நடிகைக்கு உதவிய பிரபல நடிகர்

காசநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த பாலிவுட் நடிகை பூஜா தட்வாலுக்கு நடிகர் ரவி கிஷன் உதவி செய்துள்ளார்.
 
நடிகை பூஜா தட்வால் வீர்காட்டி, ஹிந்துஸ்தான் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். வீர்காட்டி படத்தில் அவர் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகிய அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
 
ஆனால், தற்போது அவர் மிகவும் வறுமையில் வாடி வருவதும், காசநோயால் பாதிக்கப்பட்டு மும்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் அவரை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே, ஆதரவின்றியும், செலவிற்கு பணமின்றியும் அவர் தவித்து வருகிறார். மருத்துவமனைக்கு வருபவர்களில் சிலர் அவருக்கு உதவி செய்து வருகிறார்கள். மேலும், அவர் நடிகர் சல்மான் கான்னிடம் உதவி கேட்டதாக தகவலகள் வெளியாகின.
 
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பூஜா தட்வாலுக்கு, நடிகர் ரவி கிஷன் பணஉதவி செய்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பியார் கோ கையா என்ற படத்தில் ஒன்றாக நடித்ததுள்ளனர்.