1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (17:34 IST)

வெற்றி துரைசாமி மறைவு: சைதை துரைசாமிக்கு ரஜினிகாந்த் நேரில் ஆறுதல்..

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைச்சாமியின் மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் அகால மரணம் அடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சைதை துரைசாமிக்கு நேரில் ஆறுதல் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெற்றி துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளாகி ஆற்றில் விழுந்தது. 
 
இதனை அடுத்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்ட நிலையில் அவரது உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டு அதன் பின் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. 
 
நேற்று அவரது உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், அஜித் உள்பட பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சைதை துரைச்சாமி அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். .
 
Edited by Siva