முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கிண்டலடித்த நடிகர்
அடுத்தாண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னர் அங்கு சாதனைகள் நிகழ்த்தப்படும் என பிரபல நடிகர் கமால் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பகக்த்தில் பதிவிட்டுள்ளதாவது: உத்தரபிரதேசத்தில் மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர். அவர்கள் மோடிக்கும், யோகிக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது எனக் கூறி விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை கங்கனா ரணாவத் இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.