வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 29 மே 2019 (15:56 IST)

ராஷ்மிகாவுக்கு மெசேஜ் அனுப்பிய மனோபாலா! பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. 
 
பின்னர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த டியர் காம்ரேட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. முதல் படத்திலேயே மெகா ஹிட் கொடுத்தாததால் அவருக்கு அடுத்தது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியாக உள்ள ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு தெலுங்கை போலவேய  தமிழிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். 
 
பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் சமூக வலைதளத்தில் தனியாக ஆர்மிகளும், பேன் பேஜ்ஜூம் இருப்பது வழக்கம். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனாவிற்கும் சமூக வலைதள பக்கத்தில் ராஷ்மிகா பேன் பேஜ்கள் நிறைய இருக்கிறது.
 

 
அப்படி ஒரு பேன் பேஜ்ஜில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் ஒன்று பதிவிட அது  ராஷ்மிகாவின் நிஜ பேஜ்  என்று நம்பி பிரபல நடிகர் மனோபாலா ‘எப்படி இறுகிறீர்கள் ‘ என்று நலம் விசாரித்து மெசேஜ் செய்துள்ளார். அதற்கு அந்த பேன் பேஜ் அட்மினும் ‘நான் நன்றாக இருக்கிறேன் நன்றி! நீங்க எப்படி இருக்கீங்க’ என்று ரிப்லை செய்ய இதனை கண்ட ட்விட்டர் வாசிகள்.. அய்யோ பேன் பேஜ் என்று கூட தெரியாமல் இப்படி நூல் விடுகிறீர்களே மனோபாலா சார் என்று அவரை பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.