செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2017 (14:58 IST)

நடிகர் மாதவனை பார்த்து மயங்கிய பிரபல கன்னட நடிகை

ஹைதராபாத்தில் நடைபெற்ற 64வது பிலிம்பேர் விருது விழாவில், சிறந்த தமிழ் படத்திற்கான விருது ஜோக்கருக்கு கிடைத்தது.  சிறந்த நடிகருக்கான விருது இறுதிச் சுற்று படத்திற்காக மாதவனுக்கு கிடைத்தது. பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடிகை மாதவன் கலந்துகொண்டார்.

 
சிறந்த நடிகருக்கான விருதை வாங்க மேடைக்கு வந்த மாதவனை பார்த்து கன்னட நடிகை ராகினி திவேதி வைத்த கண்  வாங்காமல் பார்த்து ஜொள்ளுவிட்டார். மேடையில் ராகினி கூறியதாவது, ஹை ஹீல்ஸ் அணிந்து மணிக்கணக்கில் நிற்பதால்  கால்கள் வலிக்கிறது. ஆனால் மேடியின் சிரிப்பை பார்த்ததும் வலி எல்லாம் பறந்துபோய்விட்டது என்றார். இதை கேட்ட  மாதவனோ, உடனே பேசாமல் நான் மசாஜ் பார்லர் திறக்கலாம் போல என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
 
https://www.youtube.com/watch?v=cH0NxAE_Tvg