1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (00:04 IST)

ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏவின் மறைவுக்கு நடிகர் லாரன்ஸ் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ அன்பழகன் இன்று அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு பல கட்சித் தலைவர்களும் அரசியல் பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

.இன்று நண்பகல் அவரது பூதவுடல் கண்ணம்மா பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரொனாவுடன் போராடி உயிரிழந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏவின் மறைவுக்கு நடிகர் லாரன்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

எனது பாராமரிப்பில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் கருணாநிதியை சந்தித்தபோது,  உடனிருந்த ஜெ.அன்பழகன் எனது சமூகப் பணிகளைப் பாரட்டினார்.

அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகளை நான் மறக்க மாட்டேன்.ஆதரவற்ற குழந்தைகளும் நானும் அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.