செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (11:09 IST)

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம் – படப்பிடிப்பில் மாரடைப்பு !

காமெடி நடிகரான கிருஷ்ணமூர்த்தி குமுளியில் நடந்த படப்பிடிப்பின் போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

வடிவேலுவோடு பல படங்களில் காமெடியனாக நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பல படங்களுக்கு மேல் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர். நான் கடவுள் மற்றும் மௌனகுரு ஆகிய படங்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததை தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து வரிசையாக சில படங்களில் நடித்து வந்த இவர் புதிய படம் ஒன்றுக்காக குமுளியில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது இன்று காலை அவருக்கு மாரடைப்பு வந்து படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.