வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:29 IST)

மாநாடு படப்பிடிப்புத் தளத்தில் அடிபட்ட நடிகருக்கு அறுவை சிகிச்சை!

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து ஒன்றில் காலில் அடிபட்ட நடிகர் கருணாகரனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கலகலப்பு மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமான கருணாகரன் தனது வித்தியாசமான பாணி நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார். இவர் மாநாடு படத்தில் நடித்து வந்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டது.

இந்நிலையில் அந்த வலி தாங்க முடியாத சூழலில் இப்போது அவர் அதற்காக  அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இப்போது அவர் நலமாக இருப்பதாகவும் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் அவர் இயல்புநிலைக்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.