மீ டூ விவகாரம்: அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள நடிகை ஸ்ருதிக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ள பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’ படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.அர்ஜூன் மீது எழுந்துள்ள இந்த பாலியல் புகார் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த புகார் குறித்து தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஒரு திறமையான நடிகை என்றும். அதே சமயம் கன்னட சினிமாவின் பெருமைக்குரியவர் அர்ஜுன் சர்ஜா. எனினும் இத்தனை நாட்களாக ஸ்ருதி தனியாக அனுபவித்த வலியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புகாரை மறுத்துள்ள போதிலும் அர்ஜுன் அந்த சமயத்தில் அப்படி நடந்து கொண்டதற்காக ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்பதில் எந்த தவறு இல்லை. அவர் அப்படி செய்தால் அவரின் பெருந்தன்மையை காட்டும்.
பாலியல் தொல்லைக்கு ஆளான ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பெண்களுக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.