வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (13:33 IST)

திருமண நாளில் மனைவிக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி!

2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நெடுஞ்சாலை , மாயா, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நாகேஷ் திரையரங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
ஓரளவுக்கு கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டாலும் இவர் பெரும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். இந்நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து டைட்டில் வென்றார். 
 
தற்போது கைவசம் எல்லாம் மேல இருக்குறவரன் பாத்துப்பான்,  மௌனவலை, அலேக்கா உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளது இந்நிலையில் மனைவியை பீச்சிற்கு அழைத்துச்சென்று நண்பர்கள் வட்டாரம் சூழ மோதிரம் அணிவித்து செம சர்ப்ரைஸ் கொடுத்து ஆனந்த கண்ணீரில் நெகிழச்செய்தார். இந்த வீடியோவுக்கு வாழ்த்துக்களும் லைக்ஸும் குவித்து வருகிறது.