அபியும் அனுவும் படத்தின் டீசர் வெளியீடு

Sasikala| Last Modified புதன், 30 ஆகஸ்ட் 2017 (17:08 IST)
பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அபியும் அனுவும். இப்படம் முழுவதும் காதலை மையமாக வைத்து  உருவாகியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் ஆகியோர் நடித்துள்ளனர்.

 
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். இது குறித்து இயக்குனர் கூறுகையில், அபியும் அனுவும் ஒரு புதுமையான காதல் படம். இளம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படத்தில் சுஹாசினி, பிரபு, ரோஹினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :