புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (17:17 IST)

தைரியமாக பிக்பாஸ் போயிட்டு வா என்று சொன்னவர்… தாமிரா மறைவு குறித்து நடிகர் ஆரி அர்ஜுனன் இரங்கல்!

இன்று காலை கொரோனா தொற்று காரணமாக இயற்கை எய்திய இயக்குனர் தாமிரா அவர்களுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் அஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது சமம்ந்தமாக ஆரி வெளியிட்ட அறிக்கை:-

என் முதல் வெள்ளித்திரை பயணத்திற்கு வித்திட்ட இயக்குனரும் மாபெரும் கதாசிரியருமான தாமிரா இன்று நம்மோடு இல்லை என்ற செய்தி எனக்கு பேரதிர்ச்சி கொடுத்து என்னை மிகவும் மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தபோது எனக்கு சிறியதாக தயக்கம் இருந்தது, அப்போது நீ சரியாக இருக்கும்போது உன்னை யார் மாற்ற இயலும் என்று என் தயக்கத்தை போக்கி என்னை பிக்பாஸில் அடி எடுத்து வைக்க ஊக்கப்படுத்தினார். அவர் நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் மறைவினால் அவரது எண்ணங்களில் தோன்றிய எத்தனையோ சிறந்த கதைகளும் மரணித்து விட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்