செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (23:30 IST)

அஜித் இடத்தில் சிவகார்த்திகேயனை வைத்த நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஆரம்பம்' படத்தில் அஜித் நாயகன், நயன்தாரா நாயகி, மகேஷ் மஞ்ச்ரேக்கர் என்பவர் வில்லன் என்பது அனைவரும் அறிந்ததே.



 
 
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்திலும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். இந்த ரகசியத்தை இதுவரை காத்திருந்த படக்குழுவினர் தற்போது இதை கசியவிட்டனர்.
 
'வேலைக்காரன்' படத்தில் முக்கிய வில்லனாக பகத் பாசில் நடித்து வந்தாலும், இந்த படத்தின் இன்னொரு வில்லன் கேரக்டரில் யாரை போடலாம் என படக்குழுவினர் யோசித்து கொண்டிருந்தபோது நயன்தாரா தான் இயக்குனர் மோகன்ராஜாவிடம் மகேஷ் மஞ்ச்ரேக்கர் குறித்து கூறினாராம். 
 
'ஆரம்பம்' படத்தில் அஜித்துடன் மோதியபோது அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாகவும், தற்போது அஜித் இடத்தில் சிவகார்த்திகேயன் இருப்பதால் அவர் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் கூறினாராம். நயன்தாராவின் ஐடியாவை மோகன் ராஜா ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.