புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (18:13 IST)

ஆச்சார்யா தோல்வி எதிரொலி… ஒரு மாதத்துக்குள் ஓடிடியில்…. வெளியான அறிவிப்பு!

சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் கடந்த மாதம் இறுதியில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கூட முதல் நாளுக்குப் பிறகு ரசிகர்கள் கூட்டம் பெரியளவில் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் பெருவாரியான திரையரங்குகளில் சுத்தமாக கூட்டம் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. சிரஞ்சீவி அரசியலுக்கு சென்று திரும்பவும் சினிமாவுக்கு வந்த பிறகு ரசிகர்களை முழுமையாகக் கவர்ந்த ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதி வருவதாகவும் இதனால் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் படுதோல்வியை அடுத்து திரையரங்குகளில் ரிலீஸாகி ஒரு மாதத்துக்குள்ளாகவே ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் மே 20 ஆம் தேதி பிரபல ஓடிடியான அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.