செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (07:04 IST)

நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டியா? அறுவை சிகிச்சை செய்து அகற்றமா? ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் அஜித் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வந்துள்ள தகவல் படி அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மேனேஜர் தரப்பிலிருந்து இது ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரது மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும் அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதற்கு அஜித் ஒப்புக்கொண்டு உள்ளதை அடுத்து நேற்று இரவு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து தற்போது அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்துக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் அவர் இன்னும் ஒரு சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

சாதாரண மருத்துவ பரிசோதனை என்று கூறப்பட்ட நிலையில் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக வெளியான செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva