க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதி ஹீரோ இல்லையா? பரவும் வதந்திகள்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கிய க/பெ ரணசிங்கம் திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே
இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளதாகவும் அவர் இந்த படத்தின் ஹீரோ இல்லை என்றும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன
இந்த வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த படத்தை ஓடிடியில் ஒருமுறை பார்க்க ரூ.199 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால் இந்த படத்தை இப்போது நெகட்டிவ்வாக செய்திகளை பரப்ப ஒரு சிலர் திட்டமிட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது
இந்த படத்தில் உண்மையில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடித்து உள்ளார் என்றும் ஆனால் அவர் 30 முதல் 40 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் காட்சிகளில் உள்ளதாகவும் ஒரு சிலர் வேண்டும் என்றே வதந்தி பரப்பி வருவதாக படக்குழுவினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இது உண்மையா அல்லது வதந்தியா என்பதை ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்வார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒரு படத்தை ரிலீஸ் செய்யும் நேரத்தில் அந்த படம் குறித்து வேண்டும் என்றே வதந்தி பரப்புவதை திரையுலகை நன்கு தெரிந்தவர்களே செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்