திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (07:23 IST)

மைக்கேல் ஜாக்சன் வாய்ஸில் ரஜினிக்கு ஒரு பாட்டு… ரஹ்மானின் நிறைவேறாத கனவு!

தமிழ் சினிமாவின் பெரும் சாதனைகளில் ஒன்றாக மிகப்பெரிய வணிக வெற்றி பெற்ற திரைப்படமாக எந்திரன் இன்றும் இருக்கும். தமிழ் சினிமாவில் இருந்து உருவான முதல் பேன் இந்தியா திரைப்படம் என எந்திரன் படத்தை சொல்லலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் ஏற்கனவே கமல் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடிப்பில் உருவாக இருந்து பிரம்மாண்டம் காரணமாக பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகின. இந்த படத்தில் ஒரு பாடலை மைக்கேல் ஜாக்சனை பாடவைக்க வேண்டும் என ஏ ஆர் ரஹ்மான் ஆசைப்பட்டாராம். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ஆனால் அப்போது மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணத்தால் இந்த ஆசை நிறைவேறாமல் போயுள்ளது. இதை சமீபத்தில் ரஹ்மான் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.