செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (21:51 IST)

பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு வைரஸ் தொற்று உறுதி!

Debina Bonnerjee
பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தி தொலைக்காட்சி நடிகை டெபினா பொன்னர்ஜி. இவர் பிரபல தொலைக்காட்சி தொடர்களான ராமாயணம், சிடியா கர், சந்தோஷி மா, தெனாலி ராமா, அலாதீன் – நாம் தோ சுனா ஹோகா உள்ளிட்டவற்றில்  நடித்து மக்களிடையே பிரபலமான உள்ளார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று டெபினா பொன்னர்ஜி தன் சமூக வலைதளத்தில், தனக்கு இன்ஃப்ளூயன்சா பி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் என் குடும்பத்தைவிட்டு நான் விலகி இருக்கிறேன். என் மகள்கள் லியானா, திவிஷா ஆகியோர் நலமுடன் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.