திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (16:10 IST)

'கோட்' படத்திற்கு கூடுதல் கட்டணம்.. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு..!

விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 
 
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கோட்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளது. 
 
ஏற்கனவே இந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் தற்போது 'கோட்' படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
 
மேலும் திரையரங்குகளில் அனுமதி இன்றி அதிக காட்சிகள் திரையிடுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran