புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2022 (15:34 IST)

நிர்வாண போஸ் கொடுத்த நடிகர் மீது வழக்கு பதிவு..கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட  நடிகர் ரன்வீர் சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ரண்வீர் சிங். இவர், பத்மாவதி, கல்லிபாய், 83 உள்ளிட்ட   பல படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்  முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை இவர் திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில், இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த போஸ் கொடுத்தார். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள் இதைப் பாராட்டினாலும், ரன்வீரின்  நிர்வாணா போஸுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், ஷியாம் மங்கரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், செம்பூர் காவல் நிலையத்தில் ஐடி சட்டத்தின் பிரிவு 67Aஇன் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292, 293, 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதித்ததாதவும் புகார் அளித்தது.

ஷியாம் மங்கரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செம்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட இந்த புகாரைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67A இன் கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292, 293, 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதித்ததாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.