சூர்யாவின் 27 ஆண்டுகள் திரையுலக வாழ்க்கை.. 44வது படத்தின் புதிய போஸ்டர்..!
நடிகர் சூர்யா திரை உலகிற்கு வந்து 27 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் 44 வது படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சூர்யா கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய்யும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் தேவா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யாவின் முதல் படம் வெளியாகி 27 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. சூர்யா 44 படத்தின் இந்த போஸ்டரில் சூர்யா அட்டகாசமாக பைக் ஓட்டி வரும் காட்சியை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யா 44 படத்தில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த நிலையில் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Edited by Siva