செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (19:18 IST)

மக்கள் நீதி மய்யத்தில் 20 பெண் அமைச்சர்கள்!!! - கமல்ஹாசன்

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெற வேண்டி திராவிட கட்சிகளுடன் ரஜினியின் புதிய கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக கமல்ஹாசன் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை முன்வைத்து விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில், துணைமுதல்வர்  ஒ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் இன்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார்.#kamalhasan #makkalneedhimayyam