1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (18:11 IST)

100 கோடி வசூலித்துள்ள ஜான்வி கபூரின் படம்; அதிகாரபூர்வ தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் `தடக்' படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியை  தாண்டியுள்ளது.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் ‘தடக்’. இஷான், ஜான்வி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சஷாங்  கைட்டான் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜான்விக்கு ஜோடியாக இஷான் கட்டர் நடித்துள்ளார். இப்படம் தற்போது உலகளவில் ரூ 100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கரன் ஜோகர் அவரது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்திருப்பதாவது, “தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது. ஜான்வி, இஷான் உங்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது.
 
ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படம் மராத்தியிலும் வசூல் சாதனை புரிந்தது. சாதிய ஆணவக் கொலை இந்தியா முழுக்க உள்ள பிரச்சினை என்பதால் இந்தியிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.