1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (13:59 IST)

திறந்தவெளி கக்கூஸ்... என்னால முடியல - நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்வி - வடிவேலு புலம்பல்!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் படுதோல்வியடைந்தது குறித்து வடிவேலு புலம்பல்!
 
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி டிசம்பர் 9ம் தேதி வெளியான திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவான இப்படம்  படுதோல்வியடைந்தது. 
 
அந்த சமயத்தில் அவதார் மற்றும் லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளை ஆக்கிரமித்துவிட நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பெரும் தோல்வியை சந்தித்தது இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலு, "யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம். 
 
திரைத்துறை திறந்தவெளி கக்கூஸ் போல ஆகிவிட்டது. நிச்சயம் இதற்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும். யார் யாரோ அசிங்க அசிங்கமாக பேசுறாங்க. இதனால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுகிறார். என்னால முடியல, தயவுசெய்து மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.