’அதைக்’ கற்றுகொண்ட பிறகு தான் திருமணம்: தமன்னா

Last Updated: வியாழன், 6 ஜூன் 2019 (19:31 IST)
நடிகை தமன்னா நடித்து சென்ற வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தேவி 2.
அதில் தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது.


இந்நிலையில் நடிகை தமன்னா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பொழுது நிருபர்கள் திருமணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமன்னா, நான் நீச்சல் கற்றுக் கொண்ட பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினார்.

இதையடுத்து
நிருபர்கள் ’தேவி 2’ படத்தில் நீங்கள் கவர்ச்சியாக நடித்தது பரவலாக பேசப்படுகிறதே என்று கேட்டனர். அதற்கு, அவர் “கதைக்குத் தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன்” இவ்வாறு தெரிவித்தார்.இதில் மேலும் படிக்கவும் :