கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 78 பேர் கைது


K.N.Vadivel| Last Updated: ஞாயிறு, 28 ஜூன் 2015 (06:12 IST)
ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தோணியில் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 78 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
 
 
இலங்கையின் தெற்கே, கிரின்டா மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகம் அருகில் இருந்து கள்ளத் தோணியில் தமிழர்கள் மற்றும் சிங்களர் சிலர் ஆஸ்திரேலியா செல்ல முயன்றனர். அப்போது, அங்கு இலங்கை கடற்படையினர் திடீர் ரோந்து வந்தார். கள்ளத்தோணியில் செல்ல முயன்ற 78 பேரை கைது செய்த கடற்படையினர், அவர்களை காலே துறைமுக கடற்படை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 
இலங்கை கடற்படையினரிடம் பிடிபட்டவர்களில், 78 பேரில், 59 பேர் தமிழர்கள் 19 பேர் சிங்களர்கள் ஆவார்கள். இலங்கை மக்களின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க, ஆஸ்திரேலியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :