புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (11:56 IST)

கோலி எனக்கு ஆதரவளித்தார்… தோனி உண்மையை உணர்த்தினார் –யுவ்ராஜ் சிங் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யுவ்ராஜ் சிங் தனது கிர்க்கெட் வாழ்க்கையில் கோலி மற்றும் தோனி ஆகியோர்களின் பங்களிப்பு குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. இந்நிலையில் ஓய்வுக்குப் பின் அவர் பல அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் கோலி மற்றும் தோனி ஆகிய இருவரும் தனக்கு அளித்த ஆதரவு குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் திரும்பி அணிக்கு வந்தபோது எனக்கு கோலி ஆதரவு அளித்தார். ஆனால் தோனி உண்மையில் நடப்பது என்ன என்பதை எனக்கு உணர்த்தினார். தேர்வாளர்களின் பார்வை எ பக்கம் இல்லை என்பதை உணர்த்தினார். 2011 வரை தோனி என்னை நம்பினார். ஆனால் நான் கேன்ஸரால் பாதிக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பிய போது பல மாற்றங்கள் நடந்துவிட்டன. ஒரு அணிக்கேப்டனாக நீங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது என்பது எனக்கு புரிந்தது’ எனக் கூறியுள்ளார்.