திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (07:37 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எப்போது? ஐசிசி அறிவிப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் இறுதி போட்டி தேதி குறித்த அறிவிப்பை ஐசிசி சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

கடந்த 2021, 2023 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் மூன்றாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி 2025ஆம் ஆண்டு  ஜூன் 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தற்போது முதல் இடத்தில் உள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பெரும் வெற்றியை பொறுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்பதை கூற முடியும். அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி ஏற்கனவே இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றாலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை பெரும் வாய்ப்பை இழந்த நிலையில் இந்த முறையாவது வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva