செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (07:39 IST)

வார்ம்-அப் போட்டியில் இந்தியா அபார வெற்றி: இஷான் கிஷான், ராகுல் அசத்தல்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வார்ம்-அப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. பெயர்ஸ்டோ 49 ரன்களும் மொயின் அலி 43 ரன்கள் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 189 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மிக அபாரமாக விளையாடினார். கேஎல் ராகுல் 51 ரன்களும் இஷான் கிஷான் 70 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று நடந்த இன்னொரு போட்டியில் இலங்கை அணி, நமீபியா அணியை மிக எளிதில் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது