ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூன் 2024 (07:55 IST)

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் அதிக இலக்கை கொடுத்தது நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நேற்று நடந்த உலகக் கோப்பை டி20 இறுதி போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்து 177 என்ற இலக்கை தென்னாபிரிக்க அணிக்கு கொடுத்தது

இதற்கு முன் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 123 ரன்கள் இலக்கு கொடுத்தது தான் அதிகபட்சமாக இருந்த நிலையில் இந்திய அணி நேற்றைய போட்டியில் அதிகபட்ச இலக்கை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 173 ரன்கள் இலக்கை கொடுத்தது என்பதும் அதன் பின்னர் அந்த சாதனையை தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva