திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 மார்ச் 2023 (08:25 IST)

மகளிர் ஐபிஎல் முதல் கோப்பை யாருக்கு? டெல்லி - மும்பை அணிகள் இன்று மோதல்..!

இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 5 அணிகள் இதில் போட்டியிட்டன என்பதும் இதில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
புள்ளி பட்டியலில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு அணிகள் 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும் மும்பை அணி ரன் ரேட் குறைவாக இருந்ததால் எலிமினேட்டர் சுற்றில் உத்தரபிரதேச ஆணையுடன் மோதி வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இன்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் இறுதிப் போட்டிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டு அணிகளுமே லீக் போட்டியில் 12 புள்ளிகளை பெற்றுள்ளதால் சம வலிமை உள்ள அணிகளாக கருதப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மகளிர் ஐபிஎல் முதல் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva