தோனியின் சாதனையை சமன் செய்வாரா ரஹானே!
இந்திய அணியின் தற்காலிக டெஸ்ட் கேப்டனான ரஹானே சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றியை தேடி தந்து தோனின் சாதனையை முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோலி விடுப்பில் சென்றுள்ளதால் அஜிங்க்யா ரஹானே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் நாளை மறுநாள் தொடங்கும் சிட்னி டெஸ்ட் போட்டியையும் அவர் வென்று கொடுக்கும் பட்சத்தில் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை அவர் சமன் செய்வார்.
இந்திய கேப்டன் தோனி 2008 ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளையும் வென்று சாதனைப் படைத்தார். ரஹானே இதுவரை 3 போட்டிகளுக்கு தலைமையேற்று மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியை வெற்றி பெறும் பட்சத்தில் தோனியின் சாதனையை சமன் செய்வார்.