1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (19:19 IST)

ஆசிய கோப்பையை வெல்லுமா ரோகித் தலைமையிலான இந்திய அணி?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டதை அடுத்து ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது

 
இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.
 
ஆசிய கோப்பை போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிதான் மற்றும் ஹாங்காங். இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பட்டது. ரோகித் சர்மா தவிர மற்ற இரண்டு தொடக்க வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
 
தவான் மற்றும் ராகுல். இருவரும் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய நிலையில் இருவரில் யாருக்கு தொடக்க வீரர் வாய்ப்பு என்பது தெரியவில்லை. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக எல்லா போட்டிகளிலும் இடம் பெறுவார். கேதர் ஜாதவ் பகுதி நேர பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கும் எல்ல போட்டிகளிலும் இடம் கிடைத்துவிடும். 
 
சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப், சாசல் ஆகியோரை தவிர முடியாது. அதேபோன்று வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரை தவிர்க்க முடியாது. விக்கெட் கீப்பிங் தோனி என்பதால் தினேஷ் கார்த்திக் சந்தேகம்தான். ராயுடு மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்திய அணி எப்போதும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தான், வங்காளதேச அணிகள் அவ்வப்போது ஆபத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இங்கிலாந்து தொடரின் இந்திய அணி சொதப்பியதை அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
வரும் 18ஆம் தேதி இந்திய அணி ஹாங்காங் அணியுடன் மோதுகிறது. இதையடுத்து 19ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.