புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2017 (14:19 IST)

4வது ஒருநாள் போட்டி; இந்தியாவின் வெற்றி பயணம் தொடருமா?

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.


 

 
ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. 
 
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இன்று மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள போட்டி ஆகியவையில் இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.