1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 21 ஜூன் 2017 (06:05 IST)

இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார்?

சாம்பியன்ஷிப் டிராபி போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததாலும், கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணத்தாலும் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பதை நேற்று பார்த்தோம்.



 


இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணி விளையாட இருப்பதாக் பயிற்சியாளரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

இந்த நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக் அல்லது டாம் மூடி ஆகிய இருவரில் ஒருவர் நியமனம் செய்யப்படலாம் என்றும் அனேகமாக சேவாக் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.