திங்கள், 13 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (11:06 IST)

பாகிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்! ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் சேர்த்து 36 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 168 சேர்த்து வெற்றி பெற்றது.