திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (07:49 IST)

2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி.. மே.இ.தீவுகள் அபாரம்..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  கடந்த 3ஆம் தேதி நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.  இந்தியாவின் திலக் வர்மா அரைசதம் அடித்தார்.
 
இதனையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மே.இ.தீவுகள் அணி விளையாடிய நிலையில் 18.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன் மிக அபாரமாக விளையாடி 67 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.  
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்று விட்டால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva