புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (16:22 IST)

தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய வக்கார் யுனிஸ்!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யுனிஸ் மதம் சார்ந்து தன் பேச்சுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த சமீபத்தைய போட்டியில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்றாக பாகிஸ்தான் முன்னாள் வக்கார் யுனிஸ் மத துவேஷத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பேசிய வக்கார் யுனிஸ் ‘முகமது ரிஸ்வான் தனது அரைசதத்துக்குப் பின்  இந்துக்களுக்கு மத்தியில் நமாஸ் செய்ததைதான் இந்த போட்டியில் நான் சிறப்பானதாகக் கருதுகிறேன்.’ எனக் கூறியிருந்தார். வக்கார் யுனிஸின் இந்த பேச்சு மத துவேஷத்தை பரப்புவது போல இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது சம்மந்தமாக இப்போது வக்கார் யுனிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் ’விவாதத்தின் போது அந்த கணத்தில் நான் அப்படி பேசிவிட்டேன். நான் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என நினைத்து அப்படி சொல்லவில்லை. என் பேச்சுக்காக நான் வருந்துகிறேன். நிறம், இனம் மற்றும் மதம் அனைத்தையும் தாண்டி விளையாட்டு நம்மை ஒருங்கிணைக்கும்’ எனக் கூறியுள்ளார்.