திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 24 மே 2018 (16:20 IST)

கவுண்டி கிரிக்கெட்டில் கோஹ்லி பங்கேற்கும் வாய்ப்பு குறைவு; பிசிசிஐ

பயிற்சியின்போது முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக கோஹ்லி, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில் கோஹ்லிக்கு பயிற்சியின்போது முதுகெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காயம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கோஹ்லி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு குறைவுதான் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.