திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:48 IST)

விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர் கருத்து

Virat kohli
உலக கோப்பை டி20 தொடரில் விராத் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராத் கோலியை தொடக்க வீரராக களம் இறங்கி சதம் அடித்தார் என்றும் அதே போல் அவர் ரோகித் சர்மா உடன் இணைந்து தொடக்க வீரராக உலக கோப்பை டி20 போட்டியிலும் களமிறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தொடக்க வீர்ர்களாக ரோகித் மற்றும் விராட் களமிறங்கினால் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் இருவரும் விளாசுவார்கள் என்றும் அதனால் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 முதல் 6 ஓவர்கள் டி20 போட்டிகளில் முக்கியம் என்பதால் அதிரடி பேட்ஸ்மேன் களமிறங்க வேண்டும் என்றும் அப்போது தான் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்