வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (21:04 IST)

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய விராட் கோலி -வைரல் வீடியோ

உலகம் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலி, இவர் ஒரு சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் ஜமைக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்க கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒருசிறுவன் கோலியிடம் எனது ஆட்டோகிராப் உங்களுக்கு வேண்டுமா எனக் கேட்க.. அதற்கு புன்னகையுடன்  அந்த சிறுவனிடம் விராட் ஆட்டோகிராப் வாங்கினார்.
 
இதை அருகில் நின்று சிரித்தபடியே அனுஷ்கா சர்மா வேடிக்கை பாத்தார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.